என் மலர்

  செய்திகள்

  பெட்ரோல்-டீசல் விலை இன்றும் சரிவு
  X

  பெட்ரோல்-டீசல் விலை இன்றும் சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் பெட்ரோ, டீசல் விலையில் இன்றும் சரிவு காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
  சென்னை:

  பெட்ரோல்-டீசல் சர்வதேச விலைக்கு ஏற்ப அன்றாடம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

  இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80-ஐ தாண்டியது, டீசல் விலை லிட்டர் ரூ.76 ஆக அதிகரித்தது. கடந்த 14-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை குறைந்து வருகிறது.

  14-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.42 ஆகவும், டீசல் ரூ.76.30 ஆகவும் இருந்தது. அதன்பிறகு 17-ந்தேதி பெட்ரோல் ரூ.79.87 ஆகவும், டீசல் ரூ.75.82 ஆகவும் குறைந்தது.

  தொடர்ந்து 40 காசு, 20 காசுகள் என குறைந்து கொண்டே வந்தது. 20-ந்தேதி பெட்ரோல் லிட்டர் ரூ.79.31-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.31-க்கும் விற்கப்பட்டது. நேற்று வரை ஏற்ற இறக்கம் இல்லாமல் 3 நாட்களாக இதே விலை நீடித்தது.

  இன்று பெட்ரோல்-டீசல் விலை மேலும் சரிந்தது. பெட்ரோல் விலையில் 42 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.46 ஆகவும், டீசல் விலையில் 44 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.74.55 ஆகவும் விற்கப்பட்டது.

  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. #FuelPrice
  Next Story
  ×