search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

    5 மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தாலும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #Election2018
    சேலம்:

    சேலம் விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தொண்டர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுவது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க அதிக அளவில் வெற்றி பெறும்.

    பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை பத்து ரூபாய்க்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. கடந்தகால ஆட்சிகளில் இது போன்று பெரிய அளவில் விலையை குறைத்தது இல்லை. மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

    பேட்டரி கார் தயாரிப்பு, 5 இடங்களில் எத்தனால் தொழிற்சாலை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையும்.



    கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை அனுப்பியதுடன் மின் பாதிப்புகளை சரிசெய்ய ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்தார். கஜா பாதிப்பில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

    மேகதாது பிரச்சனையில் ஸ்டாலின், திருநாவுக்கரசு ஆகியோர் அரசியல் செய்யாமல் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து மேகதாது திட்டத்தால், தமிழகம் பாதிக்கப்படும் என கூற வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த போது மேகதாது பிரச்சனை குறித்து பேசியதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan
    Next Story
    ×