செய்திகள்

ஆரணியில் ரே‌ஷன் அரிசி கடத்திய லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

Published On 2017-12-21 08:28 GMT   |   Update On 2017-12-21 08:28 GMT
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் 3 டன் ரே‌ஷன் அரிசியை கடத்திய தொடர்பாக ஆந்திரா பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, தூத்தார் தெரு பகுதியில் லாரியில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது ஒரு மினி லாரியில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டு அதனை சிறை பிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேனில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தனர்.


தகவல் அறிந்ததும் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட லாரியையும் அதில் இருந்தவர்களையும் மீட்டனர்.

லாரியில் மொத்தம் 3 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது. அதனை லாரியுடன் பறிமுல் செய்தனர். மேலும் அதில் இருந்த பெண் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கீதா, பாபு, ஆரம்பாக்கம் தோக்கமூர் பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன், கார்த்திக் என்பது தெரிந்தது.

அவர்கள் ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் மொத்தமாக அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

ரே‌ஷன் அரிசியை கொடுத்த கடை ஊழியர்கள் யார்? அரிசி கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News