search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி"

    • காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்,
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

      தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ரகசிய தகவலின் பேரில் தருமபுரி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் பாலக்கோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது எலுமிச்சன அள்ளி பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இருவரும் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அணில் ரகுமான் (28), முக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்பதும் தெரியவந்தது. இருவரும் தருமபுரியில் இருந்து காவேரிப்பட்டி னத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியையும் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.

    ரேஷன் அரிசி முட்டை கள் தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் கடலூர் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் வேலூரை சேர்ந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பம் அபுதாகீர் என்கிற சையது அபுதாகீர் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டிவனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்தப்பட்ட வழக்கில் அபுதாகீரை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பரிந்துரையின்படி கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் அபுதாகிர் என்கிற சையது அபுதாகிர் என்பவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அபுதாகீரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில்அடைத்தனர்.

    • உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
    • அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    திருப்பூர்:

    குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி., வன்னியபெருமாள் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக திருப்பூா், அவிநாசி சாலை அணைப்புதூா் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது அங்கு 1,080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    • போலீசார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் பொது மக்களிடம் குறைந்த விலை க்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி சென்று அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதை ஆகி வருகிறது.

    இதனைதடுக்க தாளவாடி வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வருவாய் துறை அதிகாரிகள் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம் என்ற இடத்தில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    போலீசார் அந்த மோட்டார் சைக்கிள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளில் 100 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தாளவாடி பகுதியை சேர்ந்த பாஷா பாய் (55) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் பாட்சா பாயை பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிம் ஒப்படைத்தனர்.

    • போலீசார் மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
    • குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் முட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. 40 அரிசி முட்டைகளில் சுமார் 1080 கிலோ எடையுள்ள அரிசி இருந்தன.

    இதேபோல் திட்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது, ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 13 அரிசி மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தன. இதனை தொடர்ந்து 2மினி வேன் மற்றும் 1830 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 பேரை போலீசார் கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். வேப்பூர் கூட்ரோட்டில் பிடிபட்ட நபர்கள் திட்டக்குடி கோவிலூர் சேர்ந்த வீரமணி, ரவி,நெசலூர் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் திட்டக்குடி பகுதியில் அரிசி பறிமுதல் செய்யும்போது டிரைவர் தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3பேரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரேஷன் அரிசியை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ், தலைமை காவலர் கணேஷ் குமார், மற்றும் ேபாலீசார் மஞ்சத்தோப்பு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தே கத்துக்கு இடமான முறையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது அதை நிறுத்தி சோதனை செய்த போது 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது. போலீசார் அதை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் கடைவீதியில் சந்தேகப்படும் படியாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் ஆட்டோவை பரிசோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 40), சின்னசேலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (24), காமராஜ் (45) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். உணவுப்பொருள் கடத்தல் பிரிவு இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தர வின்பேரில் மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜ் தலை மையில் குமரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. களியல் வனசரக அலுவலகம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் அதி லிருந்த 4000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த னர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த தெள்ளாந்தியை சேர்ந்த மகாராஜன் (வயது 29), வினோத் பாபு (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.ரேசன் அரிசியை கடத்தி வந்த வாகன உரிமையாளர் சாம்ராஜ், கேரளாவை சேர்ந்த அன்வர் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கேரளாவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கொண்டு கடத்தி செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. அதன் பேரில் பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை பகுதியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை போலீசார் ராஜா கோவிந்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வேன் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி, வாகனம் மற்றும் அந்த நபரை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). இவர் தனது வேனில் 55 அரிசி மூட்டையில் சுமார் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசியை சேலம் மாவட்டம் தலைவாசல் கோழி பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
    • 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பெயரில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் ஈரோடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மலையம்பாளையம் அடுத்த எழுமாத்தூர்-பாசூர் ரோடு முத்து கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் 2 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது 850 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மொளாசி அடுத்த தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (25) என தெரிய வந்தது. 2 பேரும் ரேஷன் அரிசியை கடத்தி அங்குள்ள கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சுரேந்திரன், கவியரசன் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
    • புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, இலவச எண்ணில் புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18005995950 என்ற எண்ணில் பொதுமக்கள் இலவசமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனைச்சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் புலனாய்வு அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மூட்டைகளில் அடைத்து இருசக்கர வாகனம், கார், டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் கேரள மாநிலத்துக்கு சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் செம்மனாம்பதி, மீனாட்சிபுரம், கணபதி பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித்தடமாக கண்டறியப்பட்டு அங்கு ரோந்து மற்றும் வாகனத்தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநராக வன்னிய பெருமாள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் கோவை சரக டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை செய்தனர்.

    மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×