செய்திகள்
உமர் சித்திக்.

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி

Published On 2017-11-20 08:54 GMT   |   Update On 2017-11-20 08:54 GMT
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் 15.வேலம் பாளையத்தை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மனைவி ஹயருன்னிஷா. இவர்களது மகன் உமர் சித்திக் (வயது 8). சிறுவன் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உமர் சித்திக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனையடுத்து சிறுவனுக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உமர் சித்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உமர் சித்திக் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் 15.வேலம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசுகளை ஒழிக்க வேண்டும். கால்வாய்களை மருந்தது தெளித்து சுத்தமாக வைத்திருக்வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



Tags:    

Similar News