செய்திகள்

புதுவையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

Published On 2017-11-18 10:17 GMT   |   Update On 2017-11-18 10:17 GMT
புதுவையில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுனர்கள் அல்லல்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது.

கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. அதோடு பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக புதுவையில் மழை பெய்யவில்லை. அதே வேளையில் அதிகாலையில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவு பனி மூடி இருந்தது.

இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுனர்கள் அல்லல்பட்டனர். மஞ்சள் விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. பனிப்பொழிவினால் கடும் குளிரும் இருந்தது.


Tags:    

Similar News