செய்திகள்

மெர்சல் பட விவகாரத்தில் பா. ஜனதா கருத்தை பெரிது படுத்துகின்றனர்: வானதி சீனிவாசன்

Published On 2017-10-23 11:56 GMT   |   Update On 2017-10-23 11:56 GMT
பாரதீய ஜனதா எது செய்தாலும் அதனை எதிர்ப்பவர்கள் தான் தற்போது மெர்சல்பட விவகாரத்தை ஊதி பெரிது படுத்துகின்றனர் என்று வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை:

தேசிய இளைஞர் கூட்டுறவு சங்கம் மூலம் விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்தும் நடவடிக்கை மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் இன்று கிராமப்புற இளைஞர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 7 மாவட்ட கிராமப்புற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியை பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

மெர்சல் படம் தொடர்பாக கருத்து தெரிவித்ததால் பாரதீய ஜனதா கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். சினிமாவில் அரசியல் வசனம் பேசும் போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு படத்தின் வசனத்திற்காக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

பாரதீய ஜனதா எது செய்தாலும் அதனை எதிர்ப்பவர்கள் தான் தற்போது மெர்சல்பட விவகாரத்தை ஊதி பெரிது படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News