செய்திகள்
மதுவிலக்கை வலியுறுத்தி கோவையில் குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார்.

கோவையில் மதுவிலக்கை வலியுறுத்தி குமரிஅனந்தன் தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரதம்

Published On 2017-07-15 11:51 GMT   |   Update On 2017-07-15 11:51 GMT
மதுவிலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதம் கோவை சிவானந்தகாலனியில் இன்று நடந்தது.
கோவை:

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதம் கோவை சிவானந்தகாலனியில் இன்று நடந்தது.

கோவை காந்திபேரவை தலைவர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். உண்ணாவிரதத்தை ஆனைமலை மகாத்மாகாந்தி ஆசிரம நிர்வாக அறங்காவலர் வக்கீர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, துணை தலைவர் என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், பொது செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், ஐ.என்.டி.யூ.சி. கோவை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை கோவை, திருபூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் முதன்முதலாக மதுவிலக்கு கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு. மூதறிஞர் ராஜாஜி மதுவிலக்கின் தந்தை என அழைக்கப்பட்டார். இதேபோல காமராஜரும் தனது 20-வது வயதில் மதுவுக்கு எதிராக மதுரையில் போராட்டங்களை நடத்தினார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். பின்னர் ஆட்சி இல்லாதபோதும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தினார். எனவே காமராஜர் பிறந்தநாளில் காந்திய வழியில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். மதுக்கடைகளை மூடுவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
Tags:    

Similar News