search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிலக்கு"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் நடந்தது
    • போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட சுமார் 42 வாகனங்களின் ஏலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் இன்று காலை நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுத்தனர். 35 மோட்டார் சைக்கிள் உள்பட மொத்தம் 42 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மதியழகன், சுப்பையா மற்றும் டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், உதயசூரியன், சந்திரசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து கழக வாகன ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்?
    • மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது?

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மிலி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். 90 மிலி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழக அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்? மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவு படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பாலாஜி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23 போ் உயிரிழந்துள்ளனா். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினா் 'சீல்' வைத்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்.

    பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் விவசாயிகளிடம் இருந்து கள்ளை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சியான பாஜக சட்டசபையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
    • மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும் என நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டார்

    பாட்னா:

    பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவ்வகையில், பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தது உறுதி செய்யபபட்டுள்ளது. இது, மது விலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு ஏற்பட்ட மிகவும் துயரமான சம்பவம் ஆகும்.

    இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இது குறித்து அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது. மது குடித்தால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும்" என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், 'இது எங்குதான் நடக்கவில்லை? அரியானா, உத்தரபிரதேசம் என எங்கு சென்றாலும் அதே கதைதான். மற்ற இடங்களில் அவர்கள் இறக்கும்போது ஏன் தகவல் வெளிவருவதில்லை? நான் எல்லா இடங்களிலும் மீண்டும் வலியுறுத்துகிறேன், யாராவது மதுவுக்கு ஆதரவாக பேசினால், அது ஒருபோதும் பயனளிக்காது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற அவலங்கள் நடக்கும்போது ஊடகங்கள் பெரிதாக காட்டுகின்றன' என்றார்.

    • மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
    • 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    சென்னை:

    மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

    துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.

    ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.

    இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

    அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

    அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.

    ×