search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumari Ananthan"

    • வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம்.
    • வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்பு வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம். சாத்தூர் வைப்பாற்றின் மணல் திடலிலே குன்றக்குடி அடிகளார், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரை அழைத்து, பெரிய மாநாடு நடத்தி வானொலி என்றே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

    அப்போது அதை ஏற்று வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல. வானொலி என்றே தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மைலாப்பூர் என்று அழைக்கப்பட்டதை தமிழ் பெயரில் மயிலாப்பூர் என்று அழைக்க வைத்தேன்.
    • மயிலாப்பூர் என்பது மயில்கள் தோகை விரித்து ஆர்ப்பரித்து ஆடும் இடம் ஆகும்.

    சென்னை:

    முதுபெரும் காங்கிரஸ் தலைவர் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நாளை (19-ந்தேதி) தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    இந்த வயதிலும் அவரது தமிழ் தொண்டு நினைவு கூரத்தக்கது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

    1977-ல் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது மொரார்ஜி தேசாய் பிரதமர். அந்த காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.

    நான் பாராளுமன்றத்துக்குள் பல நாட்கள் போராடி தமிழிலும் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றேன்.

    ரெயில் நிலையங்களில் 'பயணிகளின் பணிவான கவனத்துக்கு' என்று அறிவித்த வார்த்தை 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு' என்று மாற்ற செய்தேன்.

    மைலாப்பூர் என்று அழைக்கப்பட்டதை தமிழ் பெயரில் மயிலாப்பூர் என்று அழைக்க வைத்தேன். மயிலாப்பூர் என்பது மயில்கள் தோகை விரித்து ஆர்ப்பரித்து ஆடும் இடம் ஆகும்.

    பாண்டி பஜார் என்பதன் உண்மையான பெயர் டபுள்யு.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் அங்காடி தெரு ஆகும். இதற்காக நான் போராட்டம் நடத்தினேன். கலைஞரும் அதை ஏற்று அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு டபுள்யு.பி.ஏ. சவுந்திர பாண்டியனார் அங்காடி தெரு காவல் நிலையம் என்று பெயர் மாற்றினார்.

    அஞ்சலகம் வழியாக பணம் அனுப்பும் 'மணியார்டர் பார்ம்'-ஐ பணவிடைத்தாள் என்றும் போஸ்ட்கார்டை 'அஞ்சல் அட்டை' என்றும் போஸ்டல் கவரை அஞ்சல் உறை என்றும், தந்தியை 'விரைவு வரைவு' என்றும் மாற்ற வைத்தேன்.

    வரும் தலைமுறையும் இவைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி அனந்தனுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், பெருந்தலைவர் காமராசரை தலைவராக ஏற்று அவருடன் இணைந்து பணியாற்றியவர், தமிழ் இலக்கியங்களில் ஆழமான புலமைமிக்க தமிழ் உணர்வாளர் என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆருயிர் அண்ணன் குமரிஆனந்தன் நாளை 91-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் என்ற செய்தி எனக்குத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறது!

    பாராளுமன்ற உறுப்பினர், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழ்நாடு பனை மர வாரியத்தின் தலைவர் என பல்துறைகளில் தனித்தன்மையோடு தொண்டாற்றிய பெருமை குமரிஆனந்தனுக்கு உண்டு.

    எளிமையை அணிகலனாகக் கொண்டு பழகுவதில் பண்பாட்டுப் பெருமகனாக-சான்றாண்மை நிரம்பிய தலைவராக, நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டும், அண்ணன் குமரி ஆனந்தன் நூற்றாண்டு கடந்து தமிழ் போல் வாழ்க! என நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • குமரி அனந்தன் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் (வயது 90) சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    டாக்டர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.

    • கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்த நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
    • குமரி அனந்தன் தலையில் இடது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    திருவட்டார்:

    தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா மற்றும் பாண்டிசேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரிஅனந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் குமரி அனந்தன் தலையில் இடது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரின் உதவியாளர் மீட்டு, சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் மூன்று தையல் போடப்பட்டது.

    பின்னர் நேற்று காலை வரை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்த குமரி அனந்தன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரை அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். #KumariAnanthan
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார்.  #KumariAnanthan
    தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #KumariAnanthan
    சென்னை:

    தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை பிரசாரம் மேற்கொண்டார்.

    திருச்செந்தூர் சென்றடைந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் தமிழ் வளர்ச்சி குறித்து கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

    இருந்தபோதிலும் தனது கருத்தை நண்பர் ஒருவர் மூலம் தயார் செய்து அதை கூட்டத்தில் படிக்கச் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    உலகத்தில் தாய்மொழிகள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. உலக மொழிகள் எதையும் உலக மக்கள் கற்கலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியையும், உலக பொது மொழியையும் கட்டாய பாடமாக படிக்க வேண்டும்.

    உள்ளூரில் தனது தாய்மொழியை பேசும் ஒருவர் பொது மொழியை, தான் செல்லும் நாடுகளில் பேசலாம். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழிலும் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றேன்.

    இதைத்தொடர்ந்து தமிழில் அஞ்சல் அட்டை, காசோலை, ரெயில் பயண முன்பதிவு படிவம், பண விடைத்தாள்(மணியார்டர்) ஆகியவை பெறப்பட்டன.

    நமது வீட்டில், பணிபுரியும் இடங்களில் தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் என்று கூறுவதை முதல் பழக்கமாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×