குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on

சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com