குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழே தன் மூச்செனத் தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com