என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமரி அனந்தன் மறைவு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
    X

    குமரி அனந்தன் மறைவு - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

    • குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    • குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

    குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் குமரி அனந்தன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×