செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் வந்த பயணியிடம் 30 பவுன் நகை திருட்டு

Published On 2017-05-25 07:53 GMT   |   Update On 2017-05-25 07:53 GMT
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் வந்த பயணியிடம் 30 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் மரியரெக்ஸ் (வயது47). இவர் தனியார் ரோடு காண்டிராக்டரிடம் மேற்பார்வையாளராக உள்ளார். இவரது மனைவி பிலோமினாள் (38). நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நடுக்காரன்காட்டில் பிலோமினாளின் பெற்றோர் வீடு உள்ளது. கோடை விடுமுறைக்காக மரியரெக்ஸ், மனைவி பிலோமினாள், மகன் மைக்கேல் (18) ஆகியோர் நடுக்காரன்காட்டிற்கு வந்திருந்தனர்.

விடுமுறை முடிந்து நேற்று மாலை அவர்கள் ஊருக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். தனது லக்கேஜ்களை இருக்கையின் அடியில் வைத்திருந்தனர். அப்போது பிலோமினாள் பாத்ரூம் செல்வதற்காக பஸ் விட்டு இறங்கி சென்றார்.

இந்த வேளையில் மரிய ரெக்சும், மைக்கேலும் கூல்டிரிங்ஸ் வாங்க சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் மரியரெக்சின் பேக்கில் இருந்த நெக்லஸ், செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட 30 பவுன் நகைகளை அபேஸ் செய்து சென்று விட்டார். வெளியில் சென்று விட்டு பஸ்சில் ஏறிய பிலோமினாள் தனது பையில் இருந்து நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வரதராஜன் மற்றும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாபுனி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News