செய்திகள்

முதல் டி20 கிரிக்கெட் - பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

Published On 2019-02-02 13:37 GMT   |   Update On 2019-02-02 13:37 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #PAKvSA
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரியுடன் 74 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய டு பிளசிஸ் 45 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 78 ரன்னில் வெளியேறினார்.



இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஹுசைன் தலாட் 40 ரன்னிலும், பாபர் அசாம் 38 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதிவரை போராடிய கேப்டன் சோயப் மாலிக் 49 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

2 ரன் அவுட் மற்றும் 3 கேட்ச்கள் பிடித்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News