செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தான் வெற்றி பெற 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்

Published On 2018-09-21 15:58 GMT   |   Update On 2018-09-21 15:58 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. #AsiaCup2018 #PAKvAFG #AFGvPAK
அபுதாபி:

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாதும், இசானுல்லா ஜனாதும் களமிறங்கினர்.

அந்த அணி 32 ரன்களுக்கு முதல் 2 விக்கெட்டுக்ளை இழந்தது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹமத் ஷாவும்,  ஹஷ்மதுல்லா ஷகிதியும் பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடி 63 ரன்களை சேர்த்தது. ரஹமத் ஷா 36 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய அஸ்கர் ஆப்கான் ஷாகிதியுடன் இணைந்து 94 ரன்கள் ஜோடி சேர்த்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. இருவரும் அரை சதமடித்தனர். நிதானமாக ஆடிய அஸ்கர் ஆப்கான் 67 ரன்கள் எடுத்து  வெளியேறினார்.



இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய    
ஹஷ்மதுல்லா ஷகிதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட்டும்,  ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. #AsiaCup2018 #PAKvAFG #AFGvPAK
Tags:    

Similar News