செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சாதனைப் படைக்க இருக்கும் விராட் கோலி

Published On 2018-06-27 11:35 GMT   |   Update On 2018-06-27 11:35 GMT
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிவேகமாக 2000 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி. #IREvIND #ViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். ஏறக்குறைய இந்த மூன்று வகை வடிவ கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இவர்தான்.

இந்தியா அயர்லாந்துக்கு எதிராக இன்றும், நாளை மறுநாளும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டியின்போது அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.

இதுவரை விராட் கோலி 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 53 இன்னிங்சில் 1983 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்கள் எடுத்த நான்காவது வீரரும், இந்தியாவின் முதல் வீரரரும் என்ற பெருமையை படைப்பார். அத்துடன் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் படைக்க இருக்கிறார்.



நியூசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் கப்தில் 2271 ரன்களும், பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 1989 ரன்களும் எடுத்துள்ளனர். மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.
Tags:    

Similar News