செய்திகள்

பல்லேகலே டெஸ்ட்: காயம் காரணமாக ஹெராத் 3-வது டெஸ்டில் இருந்து விலகல்

Published On 2017-08-08 10:08 GMT   |   Update On 2017-08-08 10:09 GMT
இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஹெராத் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி 3-வது டெஸ்டிற்கு தயாராகி வரும நிலையில், அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் காயத்தால் விலகியுள்ளார். வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருவதால் இலங்கை அணி கவலையடைந்துள்ளது.

முதல் போட்டிக்கு முன்பு கேப்டன் சண்டிமலுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டில் பீல்டிங் செய்யும்போது குணரத்னேவிற்கு விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அத்துடன் வெளியேறி அவர், தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.

2-வது டெஸ்டின்போது வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அவர் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.



முதல் டெஸ்டில் விராட் கோலி அடித்த பந்தை ஹெராத் பீல்டிங் செய்யும்போது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது டெஸ்டில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது. காயம் சரியானதால் 2-வது டெஸ்டில் விளையாடினார். 4 விக்கெட்டுக்க்ள வீழ்த்தி அசத்தினார்.

தற்போது 3-வது டெஸ்டிற்கு இலங்கை அண தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகவே, பல்லேகலே டெஸ்டில் அவர் பங்கேற்கமாட்டார் என்று இலங்கை அணி தலைமை தேர்வாளர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

ஹெராத் இடம் பெறாதது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாகும்.
Tags:    

Similar News