செய்திகள்

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு - வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

Published On 2017-06-18 17:48 GMT   |   Update On 2017-06-18 17:48 GMT
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர்.
லக்னோ:

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், அணியை விமர்சித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது காரசாரமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



சில ரசிகர்கள் தோற்றாலும், ஜெயித்தாலும் இந்திய அணியின் பக்கம் நிற்போம் என ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் சில ரசிகர்கள் இந்திய வீரர்களின் உருவப்படங்களை வீதியில் நின்று எரித்து தங்களது ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர். மேலும், சிலர் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து, அணிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அணி தோல்வியடைந்தால் சில ரசிகர்கள் வீரர்களின் வீட்டில் கல் எறிவது வழக்கம். தற்போது, அதே போல நிகழக்கூடாது என்பதற்காக முக்கிய வீரர்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்தின் முன் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News