செய்திகள்

தீவிரவாதம் ஓயும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் இல்லை - மத்திய மந்திரி விஜய் கோயல்

Published On 2017-05-29 08:46 GMT   |   Update On 2017-05-29 08:46 GMT
பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதம் முற்றிலும் குறையும் வரை அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடப்போவது இல்லை என மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
துபாய்:

பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதம் முற்றிலும் குறையும் வரை அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடப்போவது இல்லை என மத்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அட்டவணைப்படி இந்தாண்டுகள் ஒரு நாள் தொடர் நடக்க வேண்டும். ஆனால், பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளை மனதில் வைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இது தொடர்பான முடிவுகளை எடுக்காமல் தாமதப்படுத்தியது. இந்த விவகாரம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே வாக்குவாதத்தை கிளப்பியது.

இது தொர்பான புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. இந்நிலையில், இந்த பிரட்சனை தொடர்பான உரிய முடிவுகள் எடுக்க துபாயில் உள்ள ஐ.சி.சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிவடைந்த பின்னர் விஜய் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,” பாகிஸ்தான் மண்ணில் இருந்து தீவிரவாதம் இந்தியாவிற்கு வருவது முற்றிலும் குறைவது வரை, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் தொடர் விளையாடாது” என தெரிவித்தார்.
Tags:    

Similar News