search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC"

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

    இந்த நிலையில்தான் கடந்த வாரம் கொழும்பில் ஐசிசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் அட்டவணை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. சாம்பியன் டிராபியை நடத்துவதற்கு என்ன தேவையோ? அதை பெற்றுவிட்டது. வரைவு போட்டி அட்டவணை, என்ன வடிவிலான போட்டி (20 ஓவர் அல்லது 50 ஓவர்) ஆகியவற்றையும் தாக்கல் செய்துள்ளது.

    ஐசிசி இதை எப்படி வெளியிட்டு ஆலோசனை நடத்தி இறுதிப்படுத்துகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வரைவு அட்டவணையை பரிந்துரை செய்ததில் ஒரு பகுதியாக உள்ளது. லாகூரில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதுவும் லாகூரில்தான் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் ஐசிசி-யிடம் பிசிபி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆவணத்தில் அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரி முறைகள், மைதானங்கள் தேர்வு, இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கான அரசின் அனுமதி உள்ளிட்டவைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாட வருமா? என்பதை பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் பெறுவது, அட்டவணையை இறுதிப்படுத்தி வெளியிடுவது என அனைத்தை பொறுப்புகளையும் ஐசிசி-யிடம் விட்டுவிட்டது.

    அதேவேளையில் ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தால், போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்காக துணை பட்ஜெட்டையும் வைத்துள்ளது.

    பாகிஸ்தானில் சென்று விளையாடுவது என்பது முற்றிலும் இந்திய அரசின் முடிவு என பிசிசிஐ உறுதியாக தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஐ.சி.சி வருடாந்திர மாநாடு நாளை தொடங்குகிறது.
    • இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    கொழும்பு:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இதற்கிடையே, ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியானது.

    • பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    • பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.

    இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை.
    • போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு.

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    இதில் புதிதாக என்ன இருக்கிறது? இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை, போட்டிக்கு செல்லாமல் இருப்பது பிசிசிஐயின் சொந்த முடிவு. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல வாய்ப்பில்லை.

    இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது நம் நாட்டின் பொறுப்பு மட்டுமல்ல, நல்லுறவு ஏற்பட வேண்டுமானால் பாகிஸ்தானின் பொறுப்பும் கூட என்று நான் இப்போதும் கூறி வருகிறேன்.

    இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக்கூடாது, அப்படியொரு சூழல் இருக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் வகையில் பாகிஸ்தானும் பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.

    • தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் முதல்முறை நடத்த உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அறிமுக தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.

    அதன்பிறகு, இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்த உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025 ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. லாகூரில் அதிகபட்சம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை இன்று ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ருதுராஜ் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 77 குவித்ததன் மூலம் 13 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் (755 புள்ளி) முகமது ரிஸ்வான் (746 புள்ளி) உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி 646 புள்ளிகள் பெற்று 11-வது இடம் பிடித்துள்ளார்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
    • கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

    அதில், இந்தியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்த ஜடேஜா 45 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்தை நிறைவு செய்துள்ளார்.

    அதே சமயம் ஜடேஜாவை முந்தி 49 புள்ளிகளுடன் 78 ஆவது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுத்துள்ள கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார்.
    • இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

    இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

    • வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
    • மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்

    ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :

    மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

    ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.

    ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.

    தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

    கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.

    இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.

    வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

    ×