என் மலர்
விளையாட்டு

ஜியோ ஹாட்ஸ்டாரில் இனி கிரிக்கெட் பார்க்க முடியாதா?
- ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது.
- இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்த தளம் 17 மொழிகளில் நாடகங்கள், திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை வழங்குகிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரபலமானது.
ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை 3 பில்லியன் மதிப்பில் பெற்றிருந்தது. இதில் டி20 உலகக் கோப்பை 2024 (ஏற்கனவே நடந்தது), சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 போன்ற முக்கிய போட்டிகள் அடங்கும். இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலை ஸ்ட்ரீமிங் செய்யலாம், மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
இந்நிலையில், நிதி இழப்புகள் காரணமாக (குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட இழப்புகள்), ஜியோஸ்டார் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது.
இதனால், ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது. இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது. புதிய ஒளிபரப்பாளர் கிடைக்காவிட்டால், அவர்கள் உரிமைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.






