செய்திகள்

2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்குமா?

Published On 2017-05-26 08:02 GMT   |   Update On 2017-05-26 08:03 GMT
இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை சவுதம்டனில் நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் லீட்சில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2-வது போட்டி நாளை சவுதம்டனில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.



தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் தென்ஆப்பரிக்கா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் முதல் ஆட்டத்தில் தோற்றத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியும் அந்த அணிக்கு இருக்கிறது.
Tags:    

Similar News