இந்தியா

ஐதராபாத் தொகுதி பொறுப்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

Published On 2024-05-02 04:28 GMT   |   Update On 2024-05-02 04:28 GMT
  • கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
  • ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் தொகுதிகளின் முக்கிய பொறுப்பாளராக தமிழிசை சவுந்தரராஜனை பா.ஜ.க. நியமித்துள்ளது.

தேர்தல் முடியும் வரை அவர் ஐதராபாத்தில் தங்கி இருப்பார் என தெரிவித்துள்ளனர். கட்சி தலைமை உத்தரவின் படி 2 தொகுதிகளிலும் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் மாநிலம் முழுவதும் உள்ள 17 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். ஆனாலும் இந்த 3 தொகுதிகளில் உள்ள தேர்தல் பணிகளையும் சேர்த்து அவர் கவனிக்கிறார்.

ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மாதவி லதா என்ற சமூக ஆர்வலர் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பொறுப்பாளராக தமிழிசை நியமிக்கப்பட்டதன் மூலம் 2 சக்தி வாய்ந்த பெண்களை ஒவைசி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது ஒவைசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்:-

நம்மிடம் வலிமையான பிரதமர் உள்ளார். இந்தியாவிற்கே திறமையான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நான் கவர்னராக இருந்தாலும் சாதாரண பா.ஜ.க. நிர்வாகியாக இருந்தாலும் இந்த மாநில மக்களுடைய தொடர்பை புறக்கணிக்க முடியாது. அதனால்தான் கட்சி தலைமை உத்தரவிட்ட உடனே பிரசாரத்திற்கு வந்தேன் என்றார்.

Tags:    

Similar News