search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் போட்டி"

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    • சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 500 வெற்றி கண்டுள்ளது.
    • 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

    இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது.
    • இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

    தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சச்சின் அளித்த பதில்கள்:-

    டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

    தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம். போட்டியில் 40-வது ஓவரை வீசினாலும் அந்த பந்திற்கு அது 20-வது ஓவர் தான். ஆனால், பந்து 30-வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

    50 ஓவர் போட்டியை தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .

    அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது. ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்.

    என சச்சின் கூறினார்.

    உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார். #AustraliaCricket #DArcyShort #WAvQL
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

    கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    ×