என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI Match"

    • அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார்.
    • அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் களமிறங்கிய இருவரில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசி அசத்தினார்.

    இந்த தொடரின் தொடர் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஐசிசி-யின் பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். முதன் முறையாக அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதன் மூலம் அதிக வயதில் முதல் இடத்தை பிடித்த பேட்டர் என்ற பெருமையையும் இந்திய வீரர் ரோகித் சர்மா பெற்றார். இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் தனது 38 வயதில் (38Y, 73D) டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் No.1 இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோகித் (38Y 182D) ODI பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை தன்வசமாக்கியுள்ளார்.

    மேலும் அதிக இன்னிங்சிஸ் விளையாடி முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை ரோகித் பிடித்துள்ளார். அவர் 268 போட்டிகளில் விளையாடி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் குறைந்த போட்டியில் நம்பர் ஒன் இடத்தை எம் எஸ் தோனி பிடித்துள்ளார். அவர் வெறும் 38 போட்டிகள் விளையாடிய போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த வரிசையில் அடுத்ததாக சுப்மன் கில் (41 போட்டி), சச்சின் டெண்டுல்கர் (102 போட்டி), விராட் கோலி (112), ரோகித் சர்மா (268 போட்டி) ஆகியோர் உள்ளனர்.

    • ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் 4, 5-வது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் நாக்பூர் வந்தடைந்தனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சுப்மன் ஆகியோர் நாக்பூர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
    • இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே.

    துபாய்:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் (பிப்.23) அடங்கும்.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.

    இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்கத் தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதே போல் துபாயில் நடக்கும் முதலாவது அரைஇறுதிக்கான டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அரைஇறுதி முடிந்த பிறகே இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.

    • 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
    • இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.

    முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது குறித்து ஒரு பார்வை. #AUSvIND
    இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 128 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 73-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்களில் முடிவில்லை.

    ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் சந்தித்த 48 ஒரு நாள் போட்டிகளில் 35-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி கண்டன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

    ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் உலக கோப்பை உள்பட இதுவரை 12 போட்டித் தொடர்களில் பங்கேற்று இருக்கிறது. இதில் 1985-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் மட்டும் இந்திய அணி வாகை சூடியது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது. #AUSvIND
    ×