இந்தியா

கேரளாவில் பாரம்பரிய பாம்பு படகு போட்டி: போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சுற்றுலா பயணிகள்

Published On 2023-09-03 04:37 GMT   |   Update On 2023-09-03 04:37 GMT
  • பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன் முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
  • போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. இந்த ஆண்டுக்கான பாம்பு படகு போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பாம்பு படகுகள் பங்கேற்றன. இந்த படகுகள் ஒன்றை ஒன்று முந்திச்செல்வது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News