இந்தியா

பெற்ற குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற பழங்குடியினப் பெண்.. அதிர்ச்சி!

Published On 2024-05-25 10:46 GMT   |   Update On 2024-05-25 10:46 GMT
  • வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா (39) என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மே 22 ஆம் தேதி வீட்டில் வைத்து நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது. ரேஷன் கார்டை அடைமானம் வைத்து குழந்தைகளைப் பராமரித்து வந்த மோர்மதி, தற்போது பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

 

முன்னதாக தனது கருவைக் கலைக்குமாறு மருத்துவரை மோர்மதி அணுகியுள்ளார்.ஆனால் மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மோர்மதிக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்துள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு, வறுமை காரணமாகக் குழந்தையை விற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தால் குழந்தையை வாங்கிய தம்பதியரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. வறுமை காரணமாக அப்பகுதியில் குழந்தைகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Tags:    

Similar News