இந்தியா

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது- நிர்மலா சீதாராமன் பேச்சு

Published On 2022-08-01 15:12 GMT   |   Update On 2022-08-01 15:12 GMT
  • பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு.

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

உலகிலேயே அதிவேகத்துடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்தும் உலகின் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது.

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பொருளாதார வளர்ச்சி மீண்டுள்ளது. கொரோனா, ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட சூழலிலும் 7 சதவீதத்திற்குள் பணவீக்கத்தை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, நிதி அமைச்சரின் உரையை புறக்கணித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வரும் நிலையில் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

Tags:    

Similar News