இந்தியா

ராகுல் காந்தி     நரேந்திர மோடி 

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-06-09 22:42 GMT   |   Update On 2022-06-09 22:42 GMT
  • அடுத்து வரும் நாட்களில் மோடி அரசின் புதிய தாக்குதலுக்கு தயாராகுங்கள்
  • மோடி அரசு நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ விசுவாசமாக இல்லை.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

மோடி அரசு நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ விசுவாசமாக இல்லை என்றும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் சாமானிய மக்கள் மீது பணவீக்கத்தின் சுமையை ஏற்றி விட்டதாகவும் தற்போது அது தாங்க முடியாததாகி வருகிறது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வரும் காலங்களில் பணவீக்கம் குறையும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றும், வரும் நாட்களில் மோடி அரசாங்கத்தின் புதிய தாக்குதலுக்கு தயாராகுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வீடு, வாகனம், தனிநபர் கடன்கள் மற்றும் இ.எம்.ஐ.கள் உயர்ந்துள்ளது, நான் மத்திய அரசை கேட்க விரும்புகிறேன், சம்பளம் வாங்கும் வகுப்பினர் தங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவார்கள் என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

Similar News