இந்தியா

பாரத அன்னையை காங்கிரஸ் அவமதிக்கிறது- பிரதமர் மோடி

Published On 2024-05-24 08:03 GMT   |   Update On 2024-05-24 08:03 GMT
  • வந்தே மாதரம் என்று சொல்வதில் காங்கிரசுக்கு சிக்கல் உள்ளது.
  • நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருந்தபோது அதை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டது.

சிம்லா:

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. பா.ஜனதா-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வர உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் உயரமான மலைகள் என் உற்சாகத்தை உயர்வாக வைத்திருக்க எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. இந்த உயரமான மலைகள் பெருமையுடன் தலையை உயர்த்திப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தன.

பாரத அன்னையை இழிவுபடுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் பாரத அன்னையை அவமதிப்பதை காங்கிரஸ் தவிர்க்கவில்லை. பாரத் மாதா கி ஜெய், 'வந்தே மாதரம் என்று சொல்வதில் காங்கிரசுக்கு சிக்கல் உள்ளது. அப்படிப்பட்ட காங்கிரசால் எந்த நன்மையும் செய்ய முடியாது.

காங்கிரசின் சகாப்தத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருந்தபோது அதை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டது. பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் உதவி கேட்டு அலைந்தது. ஆனால் இந்தியா இனி உலகத்திடம் பிச்சை எடுக்காது. இந்தியா சொந்தமாகப் போரிடும். அதன் பிறகு இந்தியா அவர்களின் நிலத்தில் நுழைந்து அவர்களைத் தாக்கும்.

பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்று 60 ஆண்டுகளாக காங்கிரஸ் நினைக்கவில்லை. இந்தச் சமூகங்களை பற்றி காங்கிரஸ் யோசிக்கவே இல்லை. அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும். பொதுப்பிரிவு ஏழை மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினேன். இதனால் அவர்கள்இன்று பல்வேறு இடங்களில் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

இந்தியா கூட்டணியின் சதி, சமீபத்தில் மேற்கு வங்கத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்புதான் கொல்கத்தா ஐகோர்ட்டு பல முஸ்லிம் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்தியா கூட்டணியால் பல முஸ்லிம் சாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினராக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பிரிவு உரிமைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா கூட்டணி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் உரிமைகளைப் பறித்தது. அரசியலமைப்பை மீறியது. மேற்கு வங்காள முதல்-மந்திரி கோர்ட்டு தீர்ப்பை ஏற்க மறுத்து வருகிறார். அவர்களுக்கு அரசியல் சாசனமும், கோர்ட்டும் முக்கியமில்லை. அவர்களின் வாக்கு வங்கிதான் முக்கியம் என்று செயல்படுகிறார்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News