செய்திகள்
மோகன் பகவத்

அனைத்து இந்தியர்களின் மரபணுவும் ஒன்றுதான் - மோகன் பகவத்

Published On 2021-07-04 20:45 GMT   |   Update On 2021-07-04 20:45 GMT
உ.பி.யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி பெற முடியாது என தெரிவித்தார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நான் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ, ஓட்டு வங்கி அரசியலுக்காகவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் அரசியலில் இல்லை. ஒரு பிம்பத்தைப் பராமரிப்பதில் கவலைப்படவும் இல்லை. தேசத்தை பலப்படுத்தவும், நாட்டின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகவும்தான் அது செயல்படுகிறது.



முதலில் நாம் இந்தியர்கள். முதலில் இந்தியாதான் இருக்க வேண்டும். மக்கள் எவ்வாறு வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை வைத்து வேறுபாடு காட்ட முடியாது. இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்ற பயத்தின் சுழற்சியில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது.

நாட்டில் ஒற்றுமை இல்லாமல் முன்னேற்றம் சாத்தியம் இல்லை. ஒற்றுமையின் அடிப்படை தேசியத்துவமும், முன்னோர்களின் பெருமையும் தான். அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மரபணுதான் உள்ளது. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் ஆதிக்கம் இங்கு இருக்க முடியாது. இந்தியர்களின் ஆதிக்கம் தான் இருக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News