search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mohan bhagwat"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
    • அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

    சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

    எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.
    • விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சூலூர்:

    அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.

    உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

    தமிழகத்தின் ராஜ ராஜா சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது.
    • இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.

    மதுராந்தகம்:

    செய்யூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் பாரத மாதா கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் அகண்ட பாரதம் என்ற நூலை வெளியிட்டார். பின்னர் மோகன் பகவத் பேசியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கி 98 ஆண்டுகள் ஆகிறது. இந்த இயக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.

    அகண்ட பாரதத்தை நாம் உருவாக்குவோம். அதற்கு சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக இந்திய மக்கள் அனைவரும் உழைப்பு மற்றும் நிதி ஆதாரத்தையும் அளியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று மாலை 4 மணியளவில் ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் விசுவ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் பங்கேற்கிறார்.

    • பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
    • தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்

    போபால்:

    இளம் புரட்சியாளர் ஹேமு கலானியின் பிறந்தநாளையொட்டி போபாலில் நடைபெற்ற விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாரதத்தை பிரித்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் இப்போது சொல்கிறார்கள் என்றார்.

    அவர் மேலும் பேசுகையில், 'அந்த நாடு 1947க்கு முன் பாரதமாக இருந்தது. பிடிவாதத்தால் பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கே வேதனை இருக்கிறது, இந்தியாவில் மகிழ்ச்சி இருக்கிறது' என் தெரிவித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இப்போதுள்ள மோசமான உறவு குறித்து பேசிய அவர், மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் கலாச்சாரம் இந்தியாவுக்கு கிடையாது என்றும், தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் என்றும் கூறினார்.

    • 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும்.
    • இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மும்பை :

    பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீண்டுவார் இல்லை. இன்று நாம் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறோம்.

    இப்போது அறிவுறுத்தியது போல் முன்பு ரஷியாவிடம் போர் தொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர்கள் நம்மை அசட்டை செய்திருப்பார்கள். (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி 'போர் தொடுப்பதற்கான காலம் இது அல்ல' என ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக தெரிவித்திருந்தார்).

    இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் அடைந்த வெற்றிகளை நாமே வியந்து பார்க்கிறோம். 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும். அதற்கான பாதையை வகுத்து இந்தியா முன்னேறும் என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது பிற நாடுகளை பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றினால் நம்மால் வளர இயலாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சனாதன தர்மத்தை தடுக்கும் சக்திகள் போலியான கதைகளைப் பரப்புகின்றன.
    • பயங்கரவாதம் மற்றும் சமூக அமைதியின்மையை தூண்டுகின்றன.

    விஜயதசமி மற்றும் தசரா கொண்டாட்டங்களையொட்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சிறப்பு பொதுக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் ஒரு பெண் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 


    மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

    பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்.அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்றுள்ளது, மகிழ்ச்சிகரமான மற்றும் கௌரவமான சக்தியை பிரதிபலிக்கிறது. இரண்டு முறை இமயமலையில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார்.

    இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. பலர் கருத்துடன் உடன்படுகிறார்கள், ஆனால் இந்து என்ற வார்த்தையை சிலர் எதிர்க்கின்றனர், வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்து தெளிவுக்காக, இந்து என்ற சொல்லை நாங்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.

    சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எங்களால் அல்லது அமைப்பு ரீதியான இந்துக்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் பயமுறுத்துகிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ்.அல்லது இந்துக்களின் இயல்பு அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சகோதரத்துவம், நட்புறவு என்ற நிலைத்து நிற்கும் உறுதிப்பாடு உள்ளது.

    நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளங்களாக உருவாக்காமல் வளர்ந்தால், அது ஒரு சுமையாக மாறும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்க கூடாத ஒரு முக்கிய விஷயமாகும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளே புவியியல் எல்லை மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. 


    சனாதன தர்மத்தைத் தடுக்கும் தடைகள், பாரதத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு விரோதமான சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. அவை போலியான கதைகளைப் பரப்புகின்றன, அராஜகத்தை ஊக்குவிக்கின்றன, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன, மேலும் பயங்கரவாதம், மோதல்கள் மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டுகின்றன

    தொழில் படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழி வகுக்க வேண்டும். இது அனைவருக்குமானது. இந்த சமூகம் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாட்டின் அனைத்து சாதியினரும் இந்தியர்களே என்பதை நாம் உணர வேண்டும்.
    • அகண்ட பாரதம் உருவாக இளைஞர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாவது:

    பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது.பல வரலாற்று நிகழ்வுகள் நமக்குச் சொல்லப்படாமலும் சரியான முறையில் கற்பிக்கப்படாமலும் உள்ளன.

    முக்கியமாக நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்து விட்டோம். வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் நிலம் கைப்பற்றப்பட்டது.

    தேவையில்லாமல் சாதி மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். வேலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

    ஜெர்மனி சக்தி வாய்ந்ததாக மாறியபோது ஹிட்லர் பிறந்தார். அமெரிக்கா வல்லமை பெற்றபோது, ​​ஹிரோஷிமா மற்றும் நாகசாகி (அணுகுண்டு தாக்குதல்) நடந்தது. இப்போது சீனா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது, ​​​​உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

    ஆனால் இந்தியா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது ​​​​அது உலகைக் காப்பாற்ற அதன் சக்திகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா முழு உலகிற்கும் ஒற்றுமை மற்றும் அகிம்சை மந்திரத்தை வழங்குகிறது. நாம் அனைவரும் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இந்திய நாகரிகம் 2,400 ஆண்டுகள் பழமையானது. இந்தியா வளரச்சியடைந்த நாடாக மாற, இளைஞர்கள் தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்து சாதியினரும் இந்தியர்களே என்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று மாலை 4 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். வருகிற 17-ந்தேதி வரை அவர் கன்னியாகுமரியில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வரும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு விவேகானந்தா கேந்திராவில் தங்குகிறார். நாளை காலை விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    நாளை மறுநாள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிடுகிறார். 17-ந் தேதி மதியம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அகில பாரத ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பண்டைய காலத்தில் முஸ்லிம்களும், ஹிந்துக்கள்தான் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    நாக்பூர்:

    ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

    உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மசூதிகளிலும் இதுபோன்ற ஆய்வை நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் குரல் கொடுத்தனர்.

    இந்த விவகாரம் குறித்து நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஞானவாபி சர்ச்சை சில நம்பிக்கை சிக்கல்களை உள்ளடக்கியது. இதனை இரு சமூகத்தினரும் பேசிதான் தீர்த்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் வாயிலாக முடிவு வந்தால், அதனை இரு தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டும். ஞானவாபி பிரச்னையின் வரலாற்றை நாம் மாற்ற முடியாது. அதனை, இன்றைய ஹிந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ செய்யவில்லை. இந்த விவகாரம் எப்போதோ நடந்தது.

    இந்தியா மீது படையெடுத்த வந்தவர்கள், இங்கிருந்தவர்கலின் மன உறுதியை குழைக்க கோவில்களை இடித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பண்டைய காலத்தில் முஸ்லிம்களும், ஹிந்துக்கள் தான் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

    தினமும் புதிய புதிய பிரச்னைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது. பிரச்னையை நாம் ஏன் பெரிதாக்க வேண்டும். ஹிந்துக்கள் எந்தவொரு பிரச்னையை எழுப்பும் முன்னர், முஸ்லிம்களும் நமது மக்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கை மட்டுமே மாறியுள்ளது. அவர்கள் திரும்பி வர தயாராக இருந்தால், திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அதிருப்தி அடைய தேவையில்லை. இதை வைத்து ஒவ்வொரு மசூதியிலும் நாம் சிவலிங்கத்தை தேடிக்கொண்டிருக்க கூடாது.

    இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

    சென்னையில் இன்று மாலை 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் மோகன் பகவத் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் கூட்டம் மகாபலிபுரம் அருகே உள்ள உத்தண்டியில் நேற்று தொடங்கியது. தேசிய அளவிலான மிக முக்கிய தலைவர்கள் 50 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், அயோத்தி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிக்கிறார்கள்.

    வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) வரை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

    இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “வருடம் தோறும் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் வழக்கமான கூட்டம்தான். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் பற்றி தலைவர்கள் விவாதிப்பார்கள்” என்றார்.

    பொங்கல் நெருங்கி வருவதால் தமிழக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்த விருந்து நிகழ்ச்சி திருவான்மியூரில் இன்று மாலை நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக தொண்டர்கள் மத்தியில் மோகன் பகவத் உரையாற்றுகிறார். #mohanbhagwat #pongal #rss

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறி உள்ளார். #Sabarimala #SCVerdict #MohanBhagwat
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தசரா விழா நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது:-

    சபரிமலை பற்றிய சுப்ரீம்கோர்ட்டு கூறிய தீர்ப்பை இயற்கையாகவே ஏற்றுக் கொள்ள முடியாது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை கோர்ட்டு தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை. பாரம்பரியத்தை கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இந்து சமுதாயத்தின் மீது மட்டும் ஏன் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  #Sabarimala #SCVerdict #MohanBhagwat

    ×