இந்தியா

6-ம் கட்ட தேர்தலில் திரண்டு வந்து வாக்களியுங்கள்: பிரதமர் மோடி, கார்கே

Published On 2024-05-25 03:56 GMT   |   Update On 2024-05-25 03:56 GMT
  • பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்- மோடி
  • ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள்- கார்கே

டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தியில் "வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது. உங்களுடைய வாக்குகளையும் முக்கியமானதாக்குக. தேர்தல் நடைமுறையில் உற்சாகமாக மக்கள் பங்கேற்கும்போது ஜனநாயகம் செழிப்பாகும். குறிப்பாக பெண்கள் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்களிக்க வலியுறுத்துகிறேன்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய நாட்டு மக்களே, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் கடைசி இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவை எட்டியுள்ளது.

இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு. நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஒற்றுமை, நீதி, முக்கியமான பிரச்சனைக்காக வாக்களியுங்கள். வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள். வாக்கு மெஷினில் பட்டனை அழுத்தும் முன் இரண்டு முறை யோசியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News