உலகம்

உணவை ருசிக்க யாரும் வராததால் கிடைத்த புகழ்

Published On 2024-05-25 03:35 GMT   |   Update On 2024-05-25 03:35 GMT
  • பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார்.
  • அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு உணவு திருவிழா நடந்தது. அங்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சமையல் கலைஞரான 67 வயது பாதம் வியாஸ் ஒரு அரங்கில், தனது உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது ஸ்டாலுக்கு பார்வையாளர்கள் யாரும் வரவில்லை.

இதையடுத்து "எங்கள் அன்பிற்குரிய தலைமை செப் சிட்னி மக்களுக்கு உணவு தயாரித்தார், ஆனால் யாரும் வரவில்லை" என்று உணவக குழு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டது. அந்த வீடியோ 4.71 கோடி பேரின் பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் சமையல் கலைஞர் பாதம் வியாஸ் உலகப் புகழ் பெற்றார். அவரது உணவுகளைப் பற்றிய விவாதமும், இந்திய உணவு தயாரிப்பு பற்றிய கருத்துகளும் அதிகம் பகிரப்பட்டன.


Tags:    

Similar News