இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்: பதிலடி கொடுத்த பாஜக
- நமது பிரதமர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எழுந்து நின்று கைத்தட்டியது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
- அவர்கள் 'மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். நாங்கள் அவர்களிடம் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை.
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கட்டிப்பிடித்து வரவேற்றார். பிரதமர் மோடி இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்று அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "நெதன்யாகு காசாவில் இனப்படுகொலையை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான ஆதரவற்ற பாலஸ்தீனியர்களை பட்டினியால் கொன்ற நிலையில், பிரதமர் மோடி உரை நிகழ்த்தியது வெட்கக்கேடான பாதுகாப்பு" என கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:-
நமது பிரதமர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எழுந்து நின்று கைத்தட்டியது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவர்கள் 'மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். நாங்கள் அவர்களிடம் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. அது ஒரு தன்னிச்சையான எதிர்வினை. 140 கோடி இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி மீது இஸ்ரேல் மக்களின் அன்புதான் அது.
அவர்கள் (காங்கிரஸ்) இவை அனைத்திற்கும் சோகமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இல்லை.. ராகுல் காந்திக்கு வயதாகி வருவதால் அரியணையைப் பெற விரும்புகிறார். அவருக்கு அது கிடைக்காது. காங்கிரஸ் மகிழ்ச்சியற்றதாக இருக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கட்டும்.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.