உலகம்

ஜப்பான் கோவில்களில் 'ரோபோ' துறவி

Published On 2026-02-27 08:21 IST   |   Update On 2026-02-27 08:21:00 IST
  • 2 கால்களை கொண்ட இந்த ரோபோ, கோவில்களில் மந்திரங்களை ஓதுவதுடன் மதச்சடங்குகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.
  • ஜப்பானின் இந்த நவீன ஆன்மிகப் புரட்சி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுகட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'ரோபோ' துறவியை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட இந்த ரோபோ கற்றுத் தேர்ந்துள்ளது. மனிதர்களிடம் வெளிப்படையாக கூறத் தயங்கும் தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு இது தெளிவான பதில்களை வழங்குகிறது. தத்ரூபமாக மனிதத் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள 2 கால்களை கொண்ட இந்த ரோபோ, கோவில்களில் மந்திரங்களை ஓதுவதுடன் மதச்சடங்குகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.

எதிர்காலத்தில் மனிதத் துறவிகளுக்குப் பதிலாக இந்த ரோபோ துறவிகளே ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் இந்த நவீன ஆன்மிகப் புரட்சி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News