செய்திகள்
கோப்பு படம்

டெல்லியில் பொது இடங்களில் குட்கா உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Published On 2020-11-20 17:48 GMT   |   Update On 2020-11-20 17:48 GMT
டெல்லியில் பொது இடங்களில் குட்கா, பான் மசாலா போன்றவை உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கொரோனா வைரசுக்கான ஒழுங்குமுறை 2020க்கான டெல்லி தொற்று நோய் மேலாண் திருத்தத்தினை இன்று கொண்டு வந்துள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறுவோர், பொது இடங்களில் முக கவசங்களை அணியாமல் இருப்போர், பான்மசாலா, குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீது அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News