செய்திகள்
குஷ்பு, தினேஷ் குண்டுராவ்

குஷ்பு பாஜகவில் சேர்ந்துள்ளதால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தினேஷ் குண்டுராவ்

Published On 2020-10-13 02:05 GMT   |   Update On 2020-10-13 02:05 GMT
குஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பா.ஜனதா எந்த சாதனையும் செய்யாது. சில காரணங்களால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
பெங்களூரு :

பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராக பணியாற்றி வந்தவருமான குஷ்பு நேற்று டெல்லியில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் நடிகை குஷ்பு, பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசினார். இந்த நிலையில் அவர் அதே கட்சியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எந்த கொள்கையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ள காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். குஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பா.ஜனதா எந்த சாதனையும் செய்யாது. சில காரணங்களால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Tags:    

Similar News