search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினேஷ் குண்டுராவ்"

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
    • கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. கட்சி மேலிடம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இதனால் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். அப்போது தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தலை சந்திக்கவும், மிகப்பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரியுடன் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து உழைக்க வேண்டும் என்றார்.

    கடந்த சில நாட்களாக காங்கிரஸ் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    • அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
    • பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு நல்லது செய்யவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஏழைகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை பா.ஜனதா தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அரிசி கொடுக்க முடியாவிட்டால் பணம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறினர். ஆனால் அதையும் அக்கட்சியினர் விமர்சிக்கிறார்கள். உங்களின் இந்த நோய்க்கு எங்கிருந்து மருந்து கொண்டுவர முடியும்?.

    நாங்கள் பணம் கொடுக்கிறோம் அரிசி கொடுங்கள் என்று நாங்கள் மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால் அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசுக்கு கொடுக்க இருந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கிறோம். கூடுதல் அரிசியை ஏழைகளுக்கு வழங்குவதை பா.ஜனதா விரும்பவில்லை. அதனால் ஏழைகளுக்கு அரிசி கிடைக்காமல் செய்துவிட்டனர். பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு நல்லது செய்யவில்லை. நாங்கள் நல்லது செய்ய முயற்சி செய்தால் அதை பா.ஜனாவினர் தடுக்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவினருக்கு வயிற்றெரிச்சலா?. தயிரில் கல்லை தேடுவது ஏன்?.

    இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

    ×