செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும்: ராகுல் காந்தி கோரிக்கை

Published On 2020-04-21 03:20 GMT   |   Update On 2020-04-21 03:20 GMT
ஏற்கனவே வறுமையிலும், நோயிலும் வாடும் மக்களிடம் கொரோனா தடுப்பு உபகரணங்களான கிருமிநாசினி, சோப்பு, கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம். ஆனால், ஏற்கனவே வறுமையிலும், நோயிலும் வாடும் மக்களிடம் கொரோனா தடுப்பு உபகரணங்களான கிருமிநாசினி, சோப்பு, கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இது தவறானது. அதற்கான ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News