செய்திகள்
யெஸ் வங்கி

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை

Published On 2020-03-10 23:42 GMT   |   Update On 2020-03-10 23:42 GMT
யெஸ் வங்கியின் ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எப்.டி. போன்ற மின்னணு பண பரிமாற்ற சேவைகள் மீண்டும் இயங்குவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள், ஒரு வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம்வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில வங்கிச்சேவைகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அவற்றில் சில சேவைகளை நேற்று வங்கி நிர்வாகம் மீண்டும் அளிக்க தொடங்கியது. அதன்படி, வங்கியின் ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எப்.டி. போன்ற மின்னணு பண பரிமாற்ற சேவைகள் மீண்டும் இயங்குவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை, கடன் தவணை ஆகியவற்றை வேறு வங்கிகளின் கணக்கில் இருந்து மின்னணு பரிமாற்ற முறையில் செலுத்துவது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தனது ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படுவதாகவும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்குள் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News