செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2019-09-25 17:21 GMT   |   Update On 2019-09-25 17:21 GMT
தலைநகர் டெல்லியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆம் ஆத்மி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

டெல்லி அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பெண்கள் கட்டணங்கள் இன்றி இலவசமாக பயணம் செய்யலாம்  என சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்  என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது. மாதம் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News