செய்திகள்
காங்கிரஸ் கொடி

மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2019-09-12 12:04 GMT   |   Update On 2019-09-12 12:04 GMT
பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நாடுமுழுவதும் அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
புது டெல்லி:

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் முதல்முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கிவருகிறது. இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.



இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேசி வேணுகோபால் கூறுகையில், ''பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன” என தெரிவித்தார். 
Tags:    

Similar News