செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: தலைமை செயலாளர் எச்சரிக்கை

Published On 2019-08-16 10:38 GMT   |   Update On 2019-08-16 11:28 GMT
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கூட்டங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து போன்ற அனைத்து சேவைகளும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் வரும் திங்கள் கிழமை முதல் இயங்கவுள்ளது. மேலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்.



ஆனால் தற்போது காஷ்மீரில் மக்களிடையே பயத்தை உருவாக்கவும், வளர்ச்சியை தடுக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாத செயல்களை தடுக்க அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News