செய்திகள்
டிகே சிவக்குமார், எடியூரப்பா

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எடியூரப்பா ஆர்வம் காட்டவில்லை- டிகே சிவக்குமார்

Published On 2019-08-08 02:11 GMT   |   Update On 2019-08-08 02:11 GMT
முதல்-மந்திரி பதவியை அடைய எடியூரப்பா காட்டிய அவசரம், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காட்டவில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு, ஆக.8-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வட கர்நாடகத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து உதவிகள் செய்ய வேண்டிய முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லியில் இருக்கிறார். இது எடியூரப்பாவின் தனித்திறன். இதற்கு முன்பு எங்களை அவர் விமர்சித்தார். இப்போது அவரது ஆட்சியில் என்ன நடக்கிறது?.

முதல்-மந்திரி பதவியை அடைய எடியூரப்பா காட்டிய அவசரம், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காட்டவில்லை. கர்நாடக மக்கள் படித்தவர்கள், அறிவாளிகள். எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் எப்படி பயன்படுத்தி கொள்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

இந்த அரசு அமைந்து சுமார் 2 வாரம் ஆகிவிட்டது. இதுவரை மந்திரிகள் நியமனம் செய்யப்படவில்லை. ஒரு நபர் ஆட்சி நடக்கிறது. சட்டசபை இடைத்தேர்தலில் வேட்பாளர்களை கட்சி தலைவர்கள் தேர்வு செய்வார்கள். என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன். மறைந்த சுஷ்மா சுவராஜ், சிறிய வயதிலேயே தனது திறமையால் புகழ் பெற்றார்.

அவரது பாராளுமன்ற பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரி. சிறிய வயதிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரியில் சோனியா காந்தி போட்டியிட்டபோது, சுஷ்மா சுவராஜை எதிர்த்து பிரசாரம் செய்தேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். 
Tags:    

Similar News