செய்திகள்
கோப்பு படம்

ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் - மன் கி பாத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2019-06-30 07:18 GMT   |   Update On 2019-06-30 07:18 GMT
மன் கி பாத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பல மக்கள் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் விலை மதிக்க முடியாத சொத்து.

மழை நீரில் நம்மால் 8 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. நீர்ப் பற்றாக்குறைக்கு தீர்வு காணவே ஜல் சக்தி துறை உருவாக்கப்பட்டது. 
தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளேன். ஒவ்வொரு மழைத்துளி நீரையும் சேகரிக்க வேண்டும் என வலியுறுத்திபல்வேறு கிராம தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.



அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்களிடம் நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை வைக்கிறேன். நீரை சேமிக்க, நூற்றாண்டு காலமாக நாம் கடைபிடித்த பழங்கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும்.

தண்ணீர் அவசியம், சேமிப்பு , தண்ணீர் குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து நாம் அனைவரும் பிரசாரம் செய்ய வேண்டும். #Janshakthi for Jalashakti என்ற ஹேஷ்டாக்கில் தண்ணீர் தொடர்பான விஷயங்களை பகிருங்கள் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News