செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - ராகுல் காந்தி தலைமையில் 9-ம் தேதி காங். மாநில தலைவர்கள் கூட்டம்

Published On 2019-02-04 13:20 GMT   |   Update On 2019-02-04 13:20 GMT
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக 7-ம் தேதி அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார். #RahulGandhi #CongressCommitteePresidentsmeet
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மத்தியில் நடக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.

சில மாநிலங்களில் உள்ள கட்சிகள் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக  வரும் 7-ம் தேதி டெல்லியில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

மாநிலங்களில் உள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்? என இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் வரும் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு படிப்படியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RahulGandhi #CongressCommitteePresidentsmeet
Tags:    

Similar News