செய்திகள்

ஊழல் வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Published On 2019-01-23 10:01 GMT   |   Update On 2019-01-23 10:01 GMT
பொது மேலாளர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் ஏர் இந்தியா தலைவர் அர்விந்த் ஜாதவ் உள்பட மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #CBI #AirIndia #CorruptionCase
புதுடெல்லி:

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கடந்த 2009 -10ம் ஆண்டுகளில் பொது மேலாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது முறைகேடு செய்து ஆட்களை நியமனம் செய்துள்ளதாக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.



இந்நிலையில், பொது மேலாளர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் அர்விந்த் ஜாதவ் உள்பட மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக ஓய்வுபெற்ற பொது மேலாளர் எல்.பி. நக்வா, முன்னாள்  கூடுதல் பொது மேலாளர்கள் கத்பாலியா, அமிதாப் சிங் மற்றும் ரோஹித் பாசின் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. #CBI #AirIndia #CorruptionCase
Tags:    

Similar News