செய்திகள்

பிரதமர் பதவிக்கு தந்தையா? மாயாவதியா?- அகிலேஷ் யாதவுக்கு யோகி ஆதித்யநாத் கேள்வி

Published On 2019-01-14 09:08 GMT   |   Update On 2019-01-14 09:08 GMT
பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? என்று அகிலேஷ் யாதவுக்கு உத்தரபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார். #AKileshYadav #YogiAdityanath
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டணிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் “மாயாவதி பிரதமராக ஆதரவு அளிப்போம்” என்றார். உத்தரபிரதேசத்தில் இருந்து மீண்டும் ஒருவர் பிரதமராக ஆதரவு தருவோம் என்றார்.

கோப்புப்படம்

இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு தந்தை முலாயம் சிங் யாதவை நிறுத்துவாரா? அல்லது மாயாவதியை நிறுத்துவாரா? என்று அகிலேஷ் யாதவுக்கு உத்தரபிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங் யாதவை பிரதமராக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த முறை பிரதமர் வேட்பாளர் யார். முலாயம்சிங் யாதவா? அல்லது மாயாவதியா? இதை அகிலேஷ் யாதவ் விளக்க வேண்டும்.

இந்த முறை சமாஜ்வாடி கட்சி முலாயம்சிங் யாதவுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்குமா? என்பது தெளிவாக தெரியவில்லை.

பகுஜன் சமாஜ்- சமாஜ் வாடி கூட்டணி ஊழல், சாதி கண்ணோட்டத்துடன் செயல்படும் அதிகார கூட்டணியாகும். இந்த கூட்டணியால் உத்தரபிரதேச மாநில அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. இந்த இரு கட்சிகளும் ஓர் அணியில் இணைந்தது பா.ஜனதாவுக்கு சாதகமே.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார். #AKileshYadav #YogiAdityanath
Tags:    

Similar News